தூத்துக்குடி தென்பாகம் பகுதியில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இளைஞர் அருணாச்சலத்தின் உடற்கூறு ஆய்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை அருணாச்சலத்தின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. ஆனால், நேரம் தாமதமானதால் இரவு நேரத்தில் உடற்கூறு ஆய்வை நடத்த வேண்டாம் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, இன்று காலை உடற்கூறு ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அருணாச்சலத்தின் உடல், இன்று காலை மீண்டும் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டது.
இதையும் படிங்க: வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!
போலீசார் தாக்கியதால்தான் அருணாச்சலம் உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உறவினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று, உடற்கூறு ஆய்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது. இதற்காக இரண்டு வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று மருத்துவர்கள் இணைந்து உடற்கூறு ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு, குற்றவியல் நடுவர் விஜயராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
உறவினர்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
நடந்தது என்ன?
தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த வாலிபர் அருணாச்சலம் என்பவர் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக தென்பாக்கம் காவல்துறையினர் கைது செய்து கடந்த 17ஆம் தேதி விசாரணை நடத்தி வந்த நிலையில் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, தலையில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை ஆகியவை செய்யப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
இதை தொடர்ந்து அருணாச்சலத்தின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து காவல்துறையினர் அருணாச்சலத்தை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என குற்றச்சாட்டு தெரிவித்து அவரை கைது செய்த நான்கு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இது தொடர்பாக நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் அருணாச்சலம் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்
இதைத்தொடர்ந்து தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகே வைத்து அவரது குடும்பத்தினரிடம் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் விஜயராஜ் விசாரணை நடத்தினார். இதனையடுத்து உடற்கூராய்வு வீடியோ பதிவுடன் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?