தூத்துக்குடி மாவட்டம் தெம்பாக்கம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 26 வயதான அருணாச்சலம். சட்டவிரோதமாக மது விற்றதாக 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸ் இளைஞர் அருணாச்சலத்தை ஜூலை 17ஆம் தேதி கைது செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அருணாச்சலத்தின் தலை, கால் பகுதிகளில் படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் அருணாச்சலத்தை அடித்தே கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உயிரிழந்த அருணாச்சலத்தின் உடலில் போலீசார் தாக்கியதற்கான காயங்கள் இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 வயதான இளைஞர் அருணாச்சலம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அருணாச்சலம் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் சம்மதித்தனர்.
இதையும் படிங்க: ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!
இந்த நிலையில் இன்று காலை அருணாச்சலத்தின் உடற்குறை தொடங்கி நடைபெற்ற நிலையில் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. மேஜிஸ்திரேட் விசாரணை நேற்று தொடங்கிய நிலையில் அருணாச்சலத்தின் உடல் வைக்கப்பட்ட இடத்திலும் விசாரணை நடந்தது. இந்த நிலையில் உடர்புராய்வு முடிந்து அருணாச்சலத்தின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பேன் தங்கள் மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "போலீஸ் சித்திரவதையால் இளைஞர் பலி"..! தமிழகம் யார் கையில்..? விளாசிய கனிமொழி..!