சந்திர கிரகணத்தை முன்னிட்டு செப்டம்பர் 7 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படு வார்கள் எனறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 7 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 4.40 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறும்.
தொடர்ந்து, பகல் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 3 மணிக்கு ராக்கால அபிஷேகமும், 5 மணிக்கு பள்ளியறை மற்றும் நடை திருக்காபிடுதலும் நடைபெறும்.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கொடுத்த அதிமுக்கிய அப்டேட்..!
அன்றையதினம் அனைத்து பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்கள் செல்லும் சிறப்பு தரிசன வரிசைகளிலும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
அதன்பின் மறுநாள் செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “என்ஃபுல் சப்போட் உங்களுக்கு தான் இறங்கி அடிங்க” - எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு போன் போட்ட ராகுல் காந்தி...!