பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகும். இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றமாகும். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

ஆம்பூரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் மது போதையில், அந்த பள்ளிகள் பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவிகளை மடியில் அமர்த்தி முத்தமிட்டதாக புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர் மாணவிகளை மடியில் அமர்த்தி முத்தமிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: ஆம்பூர் கலவர வழக்கு.. 161 பேர் விடுதலை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
மது போதையில் இருந்த தலைமையாசிரியர் பாரத் அம்பேத்கர் என்பவர் அந்தப் பள்ளியில் பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவிகளை மடியில் அமர்த்தி முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், வட்டார கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு... வரும் 28ஆம் தேதி தீர்ப்பு!