மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஆண்டுதோறும் தீபம் ஏற்றும் பகுதியான திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள பகுதியில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றவில்லை இதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் மலையை நோக்கி சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து முன்னேறி சென்றபோது காவல்துறையினருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மலை மீது ஏற முயன்ற போது தடுப்புகளை உடைத்து இந்து முன்னணி அமைப்பினர் சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் சென்று ஏற்றலாம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதோடு, இதுதொடர்பாக தொடர்ந்த இந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த இராம ரவிக்குமார், இந்து மக்கள் கட்சியை சேர்ந்த சோலை கண்ணன், இந்து முன்னணியை சேர்ந்த மாவட்ட தலைவர் அரசப்பாண்டி கோட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் பரமசிவம் உள்ளிட்ட அரசப்பாண்டி கோட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் பரமசிவம் உள்ளிட்ட 10 பேர் மலை மேல் செல்ல உத்தரவிட்டது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த உத்தரவிற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வின் முன் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் முறையீடு செய்தார். இந்த வழக்கு நாளை முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு அறிவித்தது.
இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தத்தைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் தொடங்கி திருப்பரங்குன்றம் மலை உள்ளிட்ட பகுதிகள் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. காவல்துறையினரின் பாதுகாப்பை மீறி இந்து முன்னணியினர் மலை மீது ஏறிய நிலையில் அங்கிருந்த காவல்துறையினர் மலை மீது ஏறியவர்களை வெளியேற்றி தொடங்கினர். இதனால் போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு வெடித்தது.
இதையும் படிங்க: இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! இரவு விருந்து வழங்கும் பிரதமர் மோடி..!!
மலை உச்சியில் தீபம் ஏற்றதால் 300-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தடுப்பு வேலைகளை தகர்த்தெறிந்து மலை மீது தீபம் ஏற்ற சென்றனர். சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றம் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து இரவு இந்து அமைப்பினர் கலைந்து சென்றனர்.
இன்று காலை முதலே திருப்பரங்குன்றத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் வழக்கம்போல் காலை முதலே நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மலை மீது உள்ள தர்கா மற்றும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் செயல்படும் பூஜை பொருள்கள் கடை, டீக்கடைகள் மற்றும் உணவகங்கள்.
இந்த 144 தடை உத்தரவின்போது மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற நிகழ்வுகள் விளையாட்டுப் போட்டிகள், திருமணங்கள், இறுதி ஊர்வலங்கள், மத விழாக்கள், அரசு விழாக்களுக்கு தடை இல்லை என்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் ஆர்ப்பாட்டமோ பொதுக்கூட்டமோ நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோயிலுக்குள் வரும் பக்தர்கள் பிரசாதத்தை பெற்றுக்கொண்டு உடனடியாக செல்லுமாறும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கூட்டமாக சேர வேண்டாம் என்று ஒலிபெருக்கி வாயிலாக கோயிலுக்குள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இன்று பௌர்ணமி என்பதால் கிரிவலம் சுற்றுவதற்காக பக்தர்கள் அதிக அளவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மலை மீது தீபம் குறித்தான மேல்முறையீடு வழக்கு இன்று காலை விசாரணைக்கு வர உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் நகர் முழுவதும் 600க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கலுக்குப் பிறகு அசத்தல் அறிவிப்பு... கூட்டணி குறித்து ட்விஸ்ட் வைத்த நயினார் நாகேந்திரன்...!