திருப்பவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக விசாரணை அதிகாரியாக நாலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுரால் சுரேஷ் நியமித்து, வழக்கு தொடர்பானஆதாரங்களை ஆதாரங்களை சேகரிக்கவும் விசாரணை செய்து சென்னை மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில முதல் நாள் விசாரணையை நீதிபதிஸ்டாலின் சுந்தர் சுரேஷ் திருக்கோணம் காவல்துறை அருகே உள்ள நெஞ்சாரத்துறை சொந்தமான ஆய்வு மாளிகை அறையில் தொடங்கினார். அப்போது திருப்புவனம் ஏடிஎஸ்பி சுகுமாரன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அதனையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர் மற்றும் எப்ஐஆர் ஆவணங்கள் மற்றும் காவல் நிலை மற்றும் கோவில் சிசிடிவில் உள்ள டிவிஆர் ஆகிய நீதிபடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, திருப்புவனத்தில் உள்ள மடப்புறம் கோயிலில் பணிபுரிந்து வந்தவர் ஊழியர் சத்தீஸ்வரன் காவலாளி அஜித்குமாருக்கு காவல் துறையினால் செய்யப்பட்ட சித்திரவதை சம்பவத்தை ரகசியமாக வீடியோ எடுத்ததும் அதனை நீதிபதியிடம் ஆவணமாக சமர்ப்பித்ததும் மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் காவலர் அஜித்தை சீருடைய அணியாத காவலர்கள் பிரம்பால் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோவை சமர்ப்பிக்க விசாரணைக்காக ஆஜரான போதே சத்தீஸ்வரன் தனக்கு பாதுகாப்பு வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: கானா சென்ற பிரதமர் மோடி.. உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

தற்போது அஜித்குமாரை தாக்கிய காவலர் ராஜாவிற்கு பல ரவுடிகளோட தொடர்புடையவர் என்றும், எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் தமிழக டிஜிபிக்கு மனு ஒன்றினை அனுப்பியுள்ளார். இமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ள புகார் மனுவில், ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், ஏற்கனவே தன்னை மிரட்டினர். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் ராஜா கடந்த 28-ம் தேதியே தன்னை மிரட்டினார். தனக்கும் தன்னை சார்ந்தோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு எதிராக போர்க்கொடி.. எலான் மஸ்கை தொடர்ந்து ஒபாமா செய்த தரமான செய்கை..!