2018ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி, கமராஜர் உயர்நிலைப் பள்ளியின் சமையலறையில், 35 வயது கொண்ட சமையலர், அன்றைய உணவைத் தயார் செய்தார். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், பள்ளியின் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கும் பணியைப் புரிந்துகொண்டிருந்தார்.
அன்று, அவர் தயாரித்த உணவை மாணவர்கள் உண்ணத் தொடங்கியதும், பெற்றோரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. "தாழ்த்தப்பட்ட வகுப்பு என அவர்களால் கூறப்பட்ட பெண் சமைத்த உணவை எங்கள் குழந்தைகள் உண்ணக்கூடாது என்று கூச்சல் போட்டவர்கள், பள்ளியை முற்றுகை அடைத்தனர். இது வெறும் எதிர்ப்பு என்பதை விட, ஒரு திட்டமிட்ட சாதி அடக்குமுறையாக மாறியது.பெற்றோரின் கோரிக்கையின்படி, பள்ளி நிர்வாகம் அவரை உடனடியாக பணியை இடைநிறுத்தியது. அவர் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இந்த தீண்டாமை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற வந்தது. திருப்பூர் திருமலை கவுண்டம்பாளையம் அரசு பள்ளி சமையல தீண்டாமையுடன் நடத்தப்பட்ட வழக்கில் ஆறு பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேருக்கும் தல இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமையல் சமைத்த உணவை பள்ளி குழந்தைகளை சாப்பிட விடாமல் தடுக்க ஆறு பேருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கலைஞரை ”ஆஹா.. ஓஹோ...” என புகழ்ந்து தள்ளிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்... செம குஷியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
பழனிச்சாமி, சண்முகவேல், வெள்ளியங்கிரி, துரைசாமி, சீதாலட்சுமி ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகள் ஆறு பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்க போச்சு சட்டம் ஒழுங்கு... பொம்மை முதல்வரே...! சரமாரியாக சாடிய அதிமுக...!