திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(26). இவர் டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று மாலை அரும்பாக்கம் ஏரியில் முருகன் வெட்டுக்காயுங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற ஆரம்பாக்கம் காவல் துறையினர், அவரை மீட்டு எளாவூர் சோதனைச்சாவடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே முருகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவருடைய சடலம் உடற்கூறு ஆய்வுக்க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே கொலை நடந்த இடத்தை விசாரணை செய்த ஆரம்பாக்கம் காவல் துறையினர் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் இந்த பகுதிக்கு வந்து முருகனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக தலை கழுத்து, கை என வெட்டி சாய்த்ததாகவும், தப்பி சென்றவர்கள் கொடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். ஆரம்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் படிங்க: வழக்கறிஞர் கொலையில் திடீர் திருப்பம்... கூலிப்படையுடன் சரண்டர் ஆன முக்கிய புள்ளி...!
இதையும் படிங்க: பள்ளி அருகே அரங்கேறிய பயங்கரம்.. மர்ம நபர்களால் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை..!