திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமி என்பவரின் மகன் முருகானந்தம் 35, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். இவரது தந்தை லிங்கசாமி முன் விரோதம் காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காங்கேயம் அருகே கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அன்றைய நாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த கொலையில் தனியார் பள்ளி ஒன்றின் நிர்வாகி சம்பத்தப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தன.
தற்போது ஏற்கனவே கொலை செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமி என்பவரின் மகன் முருகானந்தம் தாராபுரம் நகராட்சி மத்திய பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே கொலை செய்யப்பட்டு பின்னந்தலையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார், வழக்கறிஞர்கள் அணியும் கருப்பு வெள்ளை சீருடை உடன் கொலை செய்யப்பட்ட முருகானந்தத்தின் உடல் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வழக்கறிஞரின் கொடூர கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார், வழக்கறிஞர் எதற்காக தனியார் பள்ளி செயல்படும் பகுதிக்கு வந்தார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்ற வருகிறது. சொத்து பிரச்சனை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட முருகானந்தத்தில் தந்தை லிங்கசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தற்போது முருகானந்தத்தின் உடல் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் உள்ள தனியார் பள்ளியின் உரிமையாளர் தண்டபாணி என்பவருக்கும், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட தண்டபாணி என் அண்ணன் முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமிக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிகாலையில் அரங்கேறிய பயங்கரம்... அண்ணன், தம்பி வெட்டிக்கொலை...!
தனது தந்தையும் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தருவேன் என கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே சபதம் செய்துவிட்டு இதற்காகவே வழக்கறிஞருக்கு படித்து முடித்தவர் முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்து வருவதாகவும், தற்போது பஸ் நிலையம் எதிரே உள்ள தண்டபாணி என்பவருக்கு சொந்தமான தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் விதிமுறைகளுக்கு புறம்பாக நான்கு மாடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் சட்டப்படி மூன்று மாடிகளுக்கு மேல் கட்டக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள முருகானந்தம் தனது சித்தப்பாவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் பள்ளியின் கூடுதல் கட்டிடமான நான்காவது மாடி கடந்த மாதம் இடிக்கப்பட்டு விட்டது. இதனால் ஏற்பட்ட விரோதமும் பழிக்குபழிவாங்கும் எண்ணமும் இரு தரப்பிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரச்சினைக்குரிய பள்ளியின் அருகிலேயே வழக்கறிஞர் முருகானந்தம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது பொது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எங்களுக்கு நீதி வேண்டும்.. எரித்துக் கொல்லப்பட்ட ஐடிஐ மாணவரின் உறவினர்கள் மறியல் போராட்டம்..!