பாஜகவின் தமிழகப் பயணம் 1980களின் முற்பகுதியில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் வேரூன்றிய இக்கட்சி, தமிழகத்தில் டிராவிட அரசியலின் சவால்களை எதிர்கொண்டது. 1984 லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 1996இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி. வேலாயுதம் என்பவரை எம்எல்ஏ ஆக்கியது அதன் முதல் மைல்கல்.
இது மிகுந்த சமூக பிரச்சினைகள், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்களைப் பயன்படுத்தியதன் விளைவு. தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உருவான 1998க்குப் பின், பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1999, 2004, 2014 தேர்தல்களில் சில இடங்களைப் பெற்றது. ஆனால், திராவிட இயக்கத்தின் சமூக நீதி, தமிழ் அடையாளம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தன. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியிலும், பாஜக தனித்து ஒரு தொகுதியை மட்டுமே வென்றது.

இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி மீண்டும் அறிவித்தார். இது பொருந்தாத கூட்டணி என்று விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாத எஸ் ஐ ஆர் பணிகள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற பாஜக முயல்வதாகவும் கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. அவசர அவசரமாக எஸ் ஐ ஆர் பணிகளை நடத்துவதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்ட வருகிறது. குறிப்பாக பாஜக தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க நினைப்பதாகவும் திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல் தேர்தலிலேயே முதல்வர் ஆகணுமாம்.. இவ்வளவுதான் விஜய்..! டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி...!
இந்த நிலையில், வடமாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் கலவரம் ஏற்படுத்த பாஜக நினைப்பதாகவும் அது ஒருபோதும் நடக்காது எனவும் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார். தில்லுமுல்ல செய்து தேர்தலில் வெற்றி பெற வேண்டிய அவசியம் திமுக விற்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்... பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல்... செல்வப் பெருந்தகை கண்டனம்...!