தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, அரசு ஊழியர்களை "நிர்வாகத்தின் தூண்கள்" எனப் பாராட்டி, அவர்களின் உழைப்பைப் பெரிதும் மதிக்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து முக்கியமான அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது தமிழக அரசு. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்புகள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன.
அரசு ஊழியர்களுக்கான தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்புகள்:
தமிழக அரசு போக்குவரத்து கழக 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடைசியாக 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2023ம் ஆண்டு முடிவடைந்தது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யணும்.. தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்வு. அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முன்பு இருந்த விதிகளின் படி மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டாஸ்மாக் விற்பனைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் 1000 ரூபாய் எல்லா வகையான ஊழியர்களுக்கும், கூடுதல் 1000 ரூபாய் ஊழியர்களின் வேலை திறன் அடிப்படையிலும் வழங்கப்படும். இதில் பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதல் விற்ற விவகாரத்தில் சிக்கிய ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வான ரூ.1000 மட்டுமே வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டை கட்டணமின்றி வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, அரசு ஊழியர்களுக்கு இலவசமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டது. இந்த முறை அரசு சார்பாக 2% உயர்வு செய்யப்பட்டதால் நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும்.
அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம், கலை, அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல்முறை..!! 4 IAS அதிகாரிகள் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்..!