முன்னதாக தமிழக சிறைச்சாலைகளில் கைதிகள் சாதி ரீதியாக அடைக்கப்படுவதாகவும் பணி ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சமையல் வேலையில் உயர் சாதியினரும், கழிவறை சுத்தம் செய்வதில் கீழ் சாதியினருக்கும் ஒதுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு சிறைச்சாலைகளில் ஜாதி பாகுபாடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் கடந்த வருடம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருந்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, உள்துறை அமைச்சகம், தமிழகம் உட்பட 14 மாநிலங்களுக்கு சிறைகளில் ஜாதி பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கடிதங்களை எழுதியது. இதையடுத்து, தற்போது தமிழக சிறைகளில் ஜாதி பாகுபாடுகளை நிறுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அடையாறு கரையோர மக்களுக்கு ரூ.17 லட்சத்தில் இலவச வீடு.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

அதன்படி, தமிழக சிறைத்துறை விதிமுறைகளில் திருத்தம் செய்து அதனை உடனடியாக அமல்படுத்தும்படி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, புதிய கைதிகள் சிறையில் அடைக்கப்படும்போது, அவர்களின் சாதி தொடர்பான எந்தவொரு தகவலையும் சிறை அதிகாரிகள் பெறக் கூடாது, பதிவு செய்யக் கூடாது, அந்த விவரங்கள் எந்தப் பதிவேட்டிலும் இடம்பெறக் கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் சாதி அடிப்படையில் வகைப்படுத்தப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சிறைப் பணிகள், குறிப்பாகக் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளை சாதி அடிப்படையில் ஒதுக்கக் கூடாது என்றும் அந்தப் பணிகள் இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடமாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.. அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை!!