இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் மெரினாவில் உள்ள கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜனவரி 22ம் தேதி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 24ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து, மறுதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் தாக்கல்செய்ய முடியும். பின்னர், ஆட்சிஅமைக்கும் கட்சி பட்ஜெட்டைதாக்கல் செய்யும். அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலக சட்டமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அடுத்த கூட்டத்தொடர் கூடுகிறது. இன்று 2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். 20-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இதையும் படிங்க: திக்...திக்... வீடியோ...!! மயான கொள்ளை திருவிழாவில் விபரீதம்... பக்தர்கள் மீது சாய்ந்த 60 அடி தேர்...!
பிப்ரவரி 20ம் தேதி வரை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல் இன்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.
இதனை முன்னிட்டு, இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர்கள் நினைவிடங்களில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தலைவர்கள் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வழக்கம் போல் இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கலாகிறது. பட்ஜெட் குறித்த தகவல்களை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தங்களுக்கு முன்னால் உள்ள டேப் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: "எமன் ஏறும் எருமை மாடு... ஒருத்தரையாவது குளோஸ் பண்ணிடுது...” - விஜயை விளாசிய மதுக்கூர் ராமலிங்கம்...!