தமிழ்நாடு மின் வாரியத்தில் (TNEB) 1,794 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு (செப்டம்பர் 3) இன்று TNPSC-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு ITI தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் / உயர்நிலைப்பள்ளிப் படிப்பில் / மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் / பட்டப் படிப்பில், தமிழை ஒருமொழிப் பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அல்லது உயர்நிலை பள்ளிப்படிப்பை / பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பங்கள் செப்டம்பர் 3 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வயது வரம்பை பொறுத்தவரை 32 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரையும் முன்னாள் ராணுவத்தினர் 50 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வு அறிவிக்கை வெளியாகும் நாளன்று போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும். பின்வரும் தகுதியைப் பெற்றிருக்கும் ஒருவர் தமிழில் போதிய தகுதி உடையவராகக் கருதப்படுவார்.
இதையும் படிங்க: TNPSC தேர்வர்களே... குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!
இந்த பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செயல்முறையில் எழுத்துத் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவை அடங்கும்.
எழுத்துத் தேர்வு பல தேர்வு வினாக்கள் (MCQ) வடிவில் நடத்தப்படும், இதில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் பாடங்களில் தேர்வு இருக்கும். விண்ணப்பிக்க விரும்புவோர் TNPSC இணையதளத்தில் உள்ள "Notifications" பகுதிக்கு சென்று, "TNPSC Recruitment 2025" இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்சி/எஸ்டி/எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ.500 மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.500 ஆகும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இந்த ஆட்சேர்ப்பு, தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.

இந்தத் தேர்வு நவம்பர் மாதத்தில் நடக்கிறது. 16.11.2025 முற்பகல் மற்றும் பிற்பகலில் கணினி மூலம் இந்தத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய குழுமத்தினால் வழங்கப்படும் பின்வரும் ஏதேனும் ஒரு தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்றிதழ்/ தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.மின் பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது சிறப்புத் திட்டத்தின்கீழ் மின்னியல் தொழில் பிரிவு படித்தவர்கள் விண்ணப்பிக்காலம்.
விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, TNPSC இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும். மேலும் https://tnpsc.gov.in/Document/tamil/13_2025_CTS_II_DIPLOMA_TAMIL_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, அறிவிக்கையைக் காணலாம்.
இதையும் படிங்க: விழிப்புடன் செயலாற்றுமா விடியல் அரசு? ஐயா வைகுண்டர் சர்ச்சை கேள்வியால் நயினார் கடும் கோபம்