தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோடை மழை பெய்தாலும் வெயிலின் தாக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழர்ச்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் வரும் 19ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் பதிவாகி மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: கோடை வெப்பத்தால் முன்கூட்டியே கோடை விடுமுறை: முழு ஆண்டு தேதியில் மாற்றம்..!

குறிப்பாக சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரிஃபரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் வெயில் சதமடைத்துள்ளது. திருத்தணி, மதுரை மற்றும் ஈரோட்டில் தலா 101 டிகிரி ஃபரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. திருச்சியில் 100 டிகிரி ஃபரன்ஹீட், சென்னை மீனம்பாக்கத்தில் 98.24 டிகிரி ஃபரன்ஹீட் , 24 டிகிரி ஃபரன்ஹீட் வெயில் சுட்டறித்தது.

நடப்பாண்டில் முதல் முறையாக வானிலை ஆய்வு மையத்தால் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் இரண்டு நாட்களுக்கு நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வெப்ப அலை வீசியதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: களேபரமான அம்பேத்கர் பிறந்தநாள்.. திமுக - பாஜகவினர் இடையே மோதல்..!