தமிழ்நாடு, தனது பன்முக கலாசாரம், இயற்கை எழில், வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றால் இந்தியாவின் முன்னணி சுற்றுலா மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC), 1971-ல் தொடங்கப்பட்டு, சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2024 ஜனவரி முதல் ஜூலை வரை 88,008 சுற்றுலாப் பயணிகள் TTDC திட்டங்கள் மூலம் பயணித்துள்ளனர்.

மாநில அரசு, 2023 சுற்றுலாக் கொள்கையை அறிமுகப்படுத்தி, மெய்நிகர் சுற்றுலா மையங்கள், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை உறுதி செய்கிறது. மேலும் அரசு 40 மாவட்டங்களை சுற்றுலா மையங்களாக அறிவித்து, உலங்கு வானூர்தி சுற்றுலா உள்ளிட்ட புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலினின் பயணம்.. எதுக்கு போறாரு தெரியுமா? முழு விவரம்..!
தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள், மாமல்லபுரத்தின் உலக பாரம்பரிய கோயில்கள், கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைவாசஸ்தலங்கள், பழவேற்காடு ஏரி, குற்றால அருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கின்றன. ஜல்லிக்கட்டு, சர்வதேச பலூன் விழா, காத்தாடி விழா போன்றவை சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்து, உலகளாவிய விருதுகளைப் பெற்றுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில், சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கொடைக்கானலில் இ-பாஸ் முறை, பிளாஸ்டிக் இல்லா பசுமைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உலக சுற்றுலா தினத்தில், தொழில் முனைவோருக்கு விருதுகள் வழங்கப்படுவதன் மூலம் சுற்றுலாத் தொழில் ஊக்குவிக்கப்படுகிறது.
இந்த முயற்சிகள், தமிழ்நாட்டை ஆசியாவின் மிகவும் ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சென்னையின் கடற்கரைகள், தஞ்சாவூரின் பிரகதீஸ்வரர் கோயில், ஏலகிரி, கொல்லி மலை போன்ற இடங்களின் இயற்கை அழகு, பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி, உலகளவில் புகழ் பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல்வேறு வசதிகளுக்கும் உரிய திட்டங்களை நிறைவேற்றிவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு பல்வேறு சுற்றுலா விருதுகளை வென்று புகழ் படைத்து வருகிறது. டெல்லியில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாடு மற்றும் பயண விருதுகளில் திருக்கோயில் சுற்றுலாவை ஊக்குவித்ததற்கான விருது; இந்தியா டுடே சுற்றுலா ஆய்வு விருதுகள் 2021 இல், சிறந்த மலைப்பகுதிக்கான விருது குன்னூருக்கும், இயற்கை எழில் கொஞ்சும் சாலை வகைப்பாட்டிற்கான விருது கொல்லி மலைக்கும் வழங்கப்பட்டுள்ளது. பசிபிக் பகுதி சுற்றுலா எழுத்தாளர்கள் சங்கம் ஆன்மீகச் சுற்றுலாவுக்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு எனும் விருது உள்ளிட்ட பல விருதுகள் வென்றுள்ளன.
இந்நிலையில் சுற்றுலாத் துறையின் வருமானம் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் 2020-21ஆம் ஆண்டில் ரூ.49.11 கோடியாக இருந்தது, 2023-24ஆம் ஆண்டில் ரூ.243.31 கோடியாக உயர்ந்து, ஐந்து மடங்கு அதிகரிப்பை எட்டியுள்ளது. இந்த சாதனையை தமிழக அரசு பெருமையுடன் அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் சுற்றுலாத் துறைக்கு அளிக்கப்பட்ட ஊக்குவிப்பு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்த வருமான உயர்வு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது. 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு இந்தியாவின் முதன்மையான சுற்றுலா மாநிலமாக விளங்குகிறது. இதற்கு அரசின் திறமையான நிர்வாகமும், சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உயர்தர வசதிகளும் காரணமாக அமைந்துள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டை சுற்றுலா மையமாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள்” எனக் கூறி, மேலும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த சாதனை, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரசு திட்டங்களில் முதல்வர் பெயருக்கு தடை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தமிழக அரசு..!!