அக்டோபர் 1ம் தேதியான நாளை ஆயுத பூஜை விடுமுறையாகவும், அக்டோபர் 2ம் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்கள் நாளை புதன் மற்றும் நாளை மறுநாள் வியாழக்கிழமை வருகின்றன. இதனால் வரும் அக்டோபர் 3ம் தேதி மட்டும் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்தது.

மேலும் அக்டோபர் 4, 5ம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன. அக்டோபர் 3ம் தேதி ஒருநாளை விடுமுறையாக அரசு அறிவித்தால் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தமிழக அரசும் இதுதொடர்பாக பரீலீசனை செய்து வருவதாக தகவல் வெளியாகின. ஆனால் அக்டோபர் 3ம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: எண்ணூரில் சோகம்.. திடீரென சரிந்து விழுந்த சாரம்.. 9 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!
இருப்பினும் சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு, சுற்றுலா செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் அடுத்த 5 நாட்களுக்கு அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்நிலையில் தொடர் விடுமுறையால் நீலகிரியில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

▪️ கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும். மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
▪️ எனினும், உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்
▪️ குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
▪️ கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரம் நிறுத்த வேண்டும். கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
▪️ காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் அனுமதிக்கப்படாது. என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பீகார்: வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!!