தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் "உங்கள் கனவை சொல்லுங்க" என்ற சிறப்பு நிகழ்ச்சித் தொடரின் நிறைவு விழா தற்போது சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி மக்களின் கனவுகளையும் ஆசைகளையும் நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றும் வகையில் அரசு உறுதிமொழி அளிக்கும் ஒரு மக்கள் நலத் திட்டமாக விளங்குகிறது.
பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்வின் இறுதிக் கட்டமாக இந்த நிறைவு விழா அமைந்துள்ளது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அமைச்சர் டி ஆர் பி ராஜா, இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் நமது முதலமைச்சர் ஒரு கனவு ஆட்சியை நடத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

மக்களிடமிருந்து கற்றுக்கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அண்ணா சொன்னதைப் போலவே முதல்வர் ஸ்டாலின் செய்து வருவதாக கூறினார். திமுக ஆட்சியில் 11.19% பொருளாதார வளர்ச்சியோடு தமிழ்நாடு தலை நிமிர்த்து நின்றுள்ளது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் அரசியல் களம்... திமுக சார்பில் போட்டியிட ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு..!!
தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் என அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள் என்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா புகழாரம் சூட்டினார். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார். இந்தியாவில் மொத்தம் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 41% பங்களிப்புடன் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காலை வாரத்துடிக்கும் காங்கிரஸ்... 234 தொகுதிகளிலும் திமுகவுக்கு காத்திருக்கும் ஆப்பு...எச்சரித்த ராஜேந்திர பாலாஜி..!