திருச்சியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூ ர் பிரகாஷ் நகர் கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சரி செய்வதற்காக தூர்வரும் பணி மேற்கொள்ளும் ஒப்பந்த தொழிலாளர்களான சின்னசேலத்தை சேர்ந்த பிரபு மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி ஆகிய இருவரும் பாதாள சாக்கடைக்குள் இறங்கியதாக கூறப்படுகிறது.
பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்வதற்காக முதலில் உள்ளே இறங்கிய பிரபு நிலைதடுமாறி கீழே விழுந்ததை தொடர்ந்து அவரை காப்பாற்றுவதற்காக முயற்சியில் ரவி என்பவரும் இறங்கியுள்ளார். அந்த போராட்டத்தின் போது பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயுவானது இருவரையும் தாக்கியுள்ளது. அந்த இருவரும் உள்ளேயே மூச்சுதிணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: விஜயகாந்த் இடத்தில் விஜய்... கலைஞர் பார்முலாவை கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி...!
திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இருவருமே உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்ய முயன்ற அப்பாவி தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மரணித்த சம்பவம் அப்பகுதியையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்... பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்... பரபரப்பு பின்னணி...!