விஜய் தமிழக அரசியலில் நுழைந்ததிலிருந்தே ஊழலை ஒழிப்பேன் என்ற உறுதிமொழியை மிக அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். அவரது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் மையக் கொள்கையாகவே ஊழல் ஒழிப்பை அவர் வைத்திருக்கிறார். இது வெறும் பேச்சு அல்ல. அவரது பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், அறிக்கைகள் எல்லாவற்றிலும் இந்தக் கருத்து தொடர்ந்து ஒலித்து வருகிறது. திமுக, அதிமுக கட்சிகளை ஊழல் கட்சி என்று விஜய் விமர்சித்து வந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசி இருந்தார். அப்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை என்றும் பொதுவெளியில் வந்தால் தான் நாட்டில் என்ன நடக்கிறது என தெரியும் எனவும் தெரிவித்தார். விஜய் நேரில் செய்தியாளர்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தமிழ்நாட்டில் உண்மை நிலவரம் அவருக்கு தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என விஜய் எப்படி கூறுகிறார் என்றும் விஜய்க்கு நாட்டு நடப்பை தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையன் குறித்து மறைமுகமாக பேசி எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து இருந்தார். விஜய்க்கு நாட்டு நடப்பு தெரியவில்லை என்று கூறிய இபிஎஸ்க்கு தமிழக வெற்றி கழகத்தின் கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தோல்வி பயத்தில் இருக்கிறார் என்றும் தோல்வி பயத்தால் தான் எடப்பாடி பழனிச்சாமி விஜயை விமர்சிக்கிறார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!
விஜய்க்கு நாட்டு நடப்பே தெரியவில்லை என்று பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் இவ்வாறு பதிலளித்தார். திமுகவின் பி டீமாக யார் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் கூறினார். அவரைப் போன்றவர்களுக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். ஒவ்வொரு நாளுக்கு ஒரு தேர்தல் அறிக்கை கொடுக்கிறார் என்றும் மொத்தமாக கொடுக்க வேண்டிய தேர்தல் அறிக்கைகளை நினைத்து நினைத்து கொடுப்பதிலேயே அவர் எந்த அளவுக்கு தோல்வி பயத்தில் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!