திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்துக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து - ஒன்னரை வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் பலி - படுகாயத்துடன் இருவர் மீட்பு - விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார் - சிறுகனூர் போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்ற கார் ஓட்டுநர் சென்னையில் தென்காசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்ற அவர் மீண்டும் சென்னை செல்வதற்காக நேற்று மாலை தென்காசி ஆலங்குளத்தில் இருந்து புறப்பட்டு உள்ளார்.
அந்தக் காரில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த செல்வகுமார் அவரது மனைவி யசோதா இவர்களது ஒன்றரை வயது குழந்தை அனோனியா மற்றும் இவர்களது நண்பர் செல்வகுமார் வேகனார் காரில் சென்னைக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: “உங்க குடும்பத்துல ஒருத்தனா சொல்லுறேன்”- ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு உரிமையோடு அழைப்பு விடுத்த ஸ்டாலின்..!
நள்ளிரவு 2 மணி அளவில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அடுத்து நெடுங்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்போது திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக கள்ளக்குறிச்சி சென்ற அரசு பேருந்து பழுதாகி நெடுங்கூர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் சிகப்பு லைட் எரியாமல் கூட நின்று கொண்டிருந்தது. பழுதாகி நின்ற அரசு பேருந்தை கவனிக்காமல் கார் ஓட்டுனர் ஜோசப் பின்னால் அதிவேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணித்த யசோதா, அவரது ஒன்னரை வயது குழந்தை அனோனியா, விஜயபாபு ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் கார் ஓட்டுனர் ஜோசப், செல்வகுமார் ஆகிய இருவரும் படுகாயத்துடன் சிறுகனூர் போலீசார் மீட்டனர்.
விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடலையும் காரில் இருந்து அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து டிஎஸ்பி தினேஷ்குமார், சிறுகனூர் காவல் ஆய்வாளர் குணசேகரன் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அன்புமணியை அழிக்கத் துடிக்கும் சுசீலா?... ரகசிய படங்களை வெளியிட்டது யார்? - பாமகவில் புது பூகம்பம்..!