கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கரூர் சம்பவத்தை அரசியல் ஆக்குவதாக டிடிவி தினகரன் விமர்சித்தார்.
கரூர் நெரிசல் சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆக்குவதாக கூறிய டி.டி.வி.தினகரனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் காழ்புணர்ச்சி, இயலாமையால் பேசும் டி.டி.வி. தினகரனை யாரும் பொருட்படுத்துவதில்லை என்று கூறினார். டி.டி.வி. தினகரனை விட்டு எப்போது ஓடலாம் என்று பலர் சுபமூகூர்த்தம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

தன்னை நம்பிய 18 எம்எல்ஏக்களை அரசியல் அனாதை ஆக்கியவர் டி.டி.வி. தினகரன் என தெரிவித்தார். பொறாமையின் உச்சத்தில் பேசுகிறார் டி.டி.வி. தினகரன் என்றும் யார் முதலமைச்சராக வர வேண்டும், வரக் கூடாது என தமிழ்நாட்டு மக்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்றும் கூறினார். அதிமுகவின் எதிர்கால அரசியல் பாதையை நீங்கள் தீர்மானிக்க தேவையில்லை என டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: TTV தினகரனுடன் இதை தான் பேசினேன்! உண்மையை போட்டு உடைத்த அண்ணாமலை...!
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என கூறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறுவதாக டிடிவி தினகரன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்ன பேச்சு இதெல்லாம்? டிடிவிக்கு வைத்தெரிச்சல்... வறுத்தெடுத்த காயத்ரி ரகுராம்