அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்து வருகிறார். அதில் தமிழக வெற்றிக்கழகம் முக்கிய இடத்தை பெறுகிறது. அரசியலின் புதிய அலை என விஜய் கூறி வருகின்றனர். ஏற்கனவே அவரை கூட்டணிக்கு அழைத்த நிலையில் அதனை மறுப்பதாக விஜய் பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக விஜயை கூட்டணிக்கு அழைக்கிறதே, அப்படியானால் கொள்கை எதிரி என பாஜகவை விஜய் கூறி வருவதால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்தது.
தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணி வைக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி பேசி வந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் சம்பவத்திற்கு உடனடியாக தமிழக வெற்றி கழகத்தை குறை சொல்லாமல் முழு பொறுப்பை ஆளும் திமுக அரசின் மீது வைத்தார். போலீஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என அவர் கூறியது விஜயை ஆதரிப்பதாக இருந்தது.

இதனிடையே, தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக வீழ்த்தப்படுவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். மேலும், சுவை கண்ட பூனை போல விஜயை தொடர்ந்து கூட்டணிக்கு அழைக்கிறார்கள் என்று விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கவா விஜய் பல கோடி ரூபாய் வருமானத்தை விட்டு வந்தார் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சின்னதா தான் முளைச்சு இருக்கா? அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு... ஃபெயிலியர் மாடல் DMK... இபிஎஸ் விமர்சனம்...!
விஜயை சிலர் கூவி கூவி அழைக்கின்றனர் என்றும் அதை விஜய் ஏற்றுக்கொண்டால் தற்கொலைக்கு சமம் எனவும் கடுமையாக சாடினார். எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக வீழ்த்தப்படுவார் என்றும் கூறினார். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கேற்ப பழனிசாமி நிச்சயம் பலனை அனுபவிப்பார் என தெரிவித்தார். 2026 தேர்தலில் பழனிசாமி நிச்சயமாக வீழ்த்தப்படுவார் என்றும் அதை செய்யப்போவது அமமுக இடம்பெறும் கூட்டணிதான் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடியை நோக்கி ‘இரட்டைக்குழல் துப்பாக்கி’... குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த மாஜி அமைச்சர்கள்...!