கடந்த தேர்தல்களில் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களை சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு இணைந்து போட்டியிடாது என்றும் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
NDA கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் மதுரையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நயினார் நாகேந்திரன் மீது கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நயினார் நாகேந்திரன் சிறிய கட்சி என அழைப்பதாகவும் கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

அதிமுக அணிகளை இணைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சி செய்து வருவதாகவும், தேவையில்லாமல் யாரையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தான் கூறினேனே தவிர விஜய்யுடன் கூட்டணி வைக்கப் போகிறேன் என்பது அர்த்தம் அல்ல என்றார். விஜய்யுடன் கூட்டணி பேசுவதாக கூறுவது தவறு என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒதுங்கி நிற்கும் அண்ணாமலை! பாஜக தலைமை மீது அதிருப்தி? என்ன சொன்னாரு தெரியுமா?
NDA கூட்டணியிலிருந்து விலகுவது தொடர்பாக நிதானமாக தான் யோசித்து முடிவு எடுத்ததாகவும் அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் கூறினார். கூட்டணி தொடர்பாக டிசம்பரில் தான் அறிவிப்போம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி திருந்த வாய்ப்பே இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: பரவால்ல! இப்பயாச்சு அவருக்கு புரிஞ்சுது... டிடிவி தினகரன் முடிவு பற்றி செல்வப் பெருந்தகை கருத்து