அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் கட்சி. இது வி.கே. சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனால் 2018 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று மதுரை மேலூரில் நிறுவப்பட்டது. இந்தக் கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து உருவாக்கப்பட்ட ஒரு பிரிவாகும். 2017 ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று, இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை சசிகலா மற்றும் தினகரன் அணியிடமிருந்து பறித்து, எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு வழங்கியதை அடுத்து, அமமுக தோற்றுவிக்கப்பட்டது
அமமுக தனது முதல் முக்கிய தேர்தல் கூட்டணியை 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமைத்தது. தேர்தல் ஆணையம் இதற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை பொதுச் சின்னமாக வழங்கியது. இந்தக் கூட்டணியில், பாஜக, அமமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாகப் போட்டியிட்டன.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அமமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், பாஜக-அமமுக கூட்டணி அதிமுகவுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் செயல்பட்டது. தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அமமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்கள் விளங்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளது பாஜக கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: #GST 2.0: சிறு சலுகை மக்கள் வேதனையை அடக்காது..! செல்வப்பெருந்தகை கருத்து..!
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிகள் இருந்த டிடிவி தினகரன் விலகியது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கருத்து தெரிவித்தார். டிடிவி தினகரனுக்கு இப்போதுதான் புரிந்து இருக்கிறது என்றும் இந்த மண்ணை நேசிக்கும் தலைவர்கள் யாரும் பாஜகவோடு கூட்டணி வைக்க விரும்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி மக்களுக்கு உகந்த கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்பலமாகும் வாக்கு திருட்டு! செப்.7ல் மாநில மாநாடு... அணி திரள செல்வப்பெருந்தகை அழைப்பு..!