தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது.
விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே அவரது ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. மக்கள் நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. விஜய் அரசியல் வருவதற்கு முன்பாக கல்வி விருதுகள் வழங்கும் விழாவை தொடங்கிய நடத்தி வருகிறார். இளைய பட்டாளத்தின் ஆதரவு விஜய்க்கு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

மதுரையில் நடந்த மாநாட்டில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் ஒன்றிணைந்து நிலையில், 2026 தேர்தல் களம் விஜய்க்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பியது. இருப்பினும் விஜய் அரசியல் பிரவேசம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். விஜயகாந்த்திற்கும், சிரஞ்சீவிக்கும் என்ன ஆனது என்ற அனைவருக்கும் தெரியும்., அதேபோல தான் விஜய்க்கும் என்ற விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பவுன்சர்களின் அடாவடித்தனம்.. தவெக தொண்டர் பரபரப்பு புகார்.. FIR-ல் முதல் பெயராக விஜய் சேர்ப்பு..!!
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க 2006 தேர்தலில் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியது போல 2026 தேர்தலில் விஜய் தாகத்தை ஏற்படுத்துவார் என டிடிவி தினகரன் தெரிவித்தார். தான் எதார்த்தமாக கூறுவதாகவும் அதற்காக அந்த கூட்டணிக்கு செல்வேன் என்று கூறுவதாக அர்த்தம் இல்லை எனவும் தெரிவித்தார். அதிமுகவினர் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: சர்ச்சையான தவெக மதுரை மாநாடு.. தலைவர் விஜய் மீது போலீசில் பரபரப்பு புகார்..!!