பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவி இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். தேவாலயத்தில் நடக்கும் இலவச இசை பயிற்சி வகுப்புக்கு வந்த 17 வயது சிறுமியிடம் பாதிரியார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் பாதிரியார் பன்னீர்செல்வம் என்பவரை ப்ரோட்டோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: காமப்பேய்... அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... இயற்பியல் ஆசிரியருக்கு வலை வீச்சு...!
தேவாலயத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இது போன்ற பாலியல் சீண்டல்கள் நடைபெற்று வருவது கவலை அளிப்பதாகவும் சட்டத்தை கடுமையாக்குவதன் மூலமே பாலியல் குற்றங்கள் தடுக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அடப்பாவிகளா... இளம் பெண்ணை நண்பனோடு சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த காதலன்... லாடம் கட்டிய போலீஸ்...!