அனைத்து கட்சி தலைவர்களைப் போலவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் உற்சாகமாக நடத்தி வந்தார். அவரைக் காண அலைக்கடலென மக்கள் குவிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தது. கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வந்தார்.
ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக கரூரில் நடந்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டு நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அது மட்டுமல்லாது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் விஜய் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. விஜய்க்கு திமுக ஆதரவளிப்பதாகவும் அவரை பாதுகாப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் ஆதவ் அர்ஜுனா... உண்மை வெளிவரும் என திட்டவட்டம்...!
அப்போது, விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை என்று கூறினார். பாஜகவின் சி டிமாக விஜய் செயல்படுகிறார் என்றும் யாரையும் அனாவசியமாக கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். விஜய்க்கு பாஜக தொடர்ந்து ஆதரவு அளிப்பதில் இருந்து அவர் பாஜகவின் டீம் என்பது உண்மையாகவதாகவும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்ஜாமின் மறுத்த நீதிமன்றம்... தவெக மாவட்டச் செயலாளர் தலைமறைவு? தேடும் வேட்டையில் போலீஸ்...!