தமிழக அரசியலில் புதிய அலை என்று கூறப்படும் விஜயின் அரசியல் பயணம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் நடைபெற்ற மாநாடுகள் அதனை பிரதிபலித்தன. தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கடந்த மாதம் 13ஆம் தேதி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கி இருந்தார். அதான் தொடர்ந்து அரியலூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் நடத்தினார்.
இதில் கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜய், சிக்கலுக்கு ஆளானார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜயை உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

நாமக்கல் பிரச்சாரத்தின் போது தனியார் மருத்துவமனையை தமிழக வெற்றி கழகத்தினர் அடித்து உடைத்ததாக வழக்கு தொடரப்பட்டது. அது மட்டும் இல்லாமல் பொது சொத்துக்களை தமிழக வெற்றி கழகத்தினர் சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்பதால் தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் கரூர் சம்பவம்... தாராளமா செய்ங்க! கிரீன் சிக்னல் காட்டிய நீதிமன்றம்...!
இந்த மனுவை விசாரித்தபோது, தமிழக வெற்றி கழகத்தினர் தனியார் மருத்துவமனையையும், பொது சொத்துக்களையும் சேதப்படுத்தியதாக சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை ஆதாரங்களாக கொடுத்தனர். அப்போது தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடியில் ஈடுபட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், தவெகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சதீஷ்குமார் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்க... அதிரடி காட்டிய கோர்ட்...!