தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கூட்டணி முடிவு தொடர்பாகவும், முதல்வர் வேட்பாளர் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்று செயற்கொள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கியும் ஒருமனதாக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #2026ELECTION: விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் தொடக்கம்... கூட்டணி தொடர்பான அது முக்கிய ஆலோசனை!

மேலும், செப்டம்பர் முதல் வாரம் முதல் தமிழக முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக தமிழக வெற்றி கழகம் வெளிப்படுத்தி உள்ளது. வெற்றி கழகம் வெளிப்படுத்தி உள்ளது. என்ன நடந்தாலும் தனித்தே போட்டியென சீமான் உறுதியாக உள்ள நிலையில், திமுக அதிமுக தலைமையில் ஏற்கனவே கூட்டணி இறுதிச் செய்யப்பட்டுள்ளது. தவெகவும் தங்கள் தலைமையில் தான் கூட்டணி என்று தற்போது அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அப்படி என்ன அவசரம்? மாத்தி வெய்ங்க..! நீதிபதி கொடுத்த ஷாக்... தவெக அப்செட்!
மேலும், நெல் கொள்முதல் செய்வதில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது என்றும் தமிழகத்தில் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள முடிவெடுத்து சிறுபான்மையினரின் வாக்குகளை குறைக்க முயல்வதாகவும் பாஜக மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் பாஜக அரசின் செயலை தமிழக வெற்றி கழகம் ஏற்றுக்கொள்ளாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரை நூற்றாண்டு காலமாக பின்பற்றி வரும் இரு மொழி கொள்கையே அடுத்த நூற்றாண்டு காலம் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கிடைத்த ஆதாரங்கள் மூலம் தெளிவாகியுள்ள தமிழர்களின் நாகரிகத்தை மூடி மறைக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக கபட நாடகம் ஆடும் திமுக அரசின் அராஜக போக்கிற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீடு நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தியும், விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கையை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்ற கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.