சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா நடத்திய பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் அயனாவரம் பகுதியில் நடைபெற்றது. தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொது செயலரான ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று அயனாவரத்தில் தெருமுனை பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருந்தபோது, பெண் தொண்டர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் உடைந்த கண்ணாடித் துண்டுகளுடன் மதுபாட்டில் விழுந்தது. இதில் அயனாவரத்தைச் சேர்ந்த 45 வயதான பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

மேடையில் இருந்த ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடனடியாக ஆத்திரம் அடைந்தனர். இதுபோன்ற சதி செயல்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை இந்த இடத்திலிருந்து நகர மாட்டேன் என்று ஆதவ் அர்ஜுனா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தங்களிடம் சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!
பின்னர் மது பாட்டில் வீசிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கும் 15 நாட்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் தெரியாமல் செய்து விட்டதாகவும் தங்களை விட்டு விடுமாறும் குற்றவாளிகள் கெஞ்சியதாக கூறப்படும் நிலையில் 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு கரூர் துயரம் போதும்... விஜய் மீது ஏன் CASE போட்டீங்க..! கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா..!!