தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசை அமைத்தது. மே 10, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
முதல்வராக ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்று சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னை ஆளுநர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் 23 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். இதன் மூலம் தவெக அரசு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலுவான ஆட்சியமைப்பை நோக்கி முன்னேறுகிறது.

தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம்பெறும் 23 அமைச்சர்களின் பட்டியல் வெளியானது. இதற்கிடையில் பெரும் ஏமாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக அமைச்சரவையில் 20 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. நீலகிரி, திருப்பூர், தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க: விஜய் அரசின் Women Power! அமைச்சரவையில் 4 பெண்கள்... எந்தெந்த துறைகள்..?
இருப்பினும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறாத குமரி மாவட்டத்திற்கு மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. பல்வேறு புதிய முகங்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும் 20 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING போட்டுறா வெடிய... தமிழக அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 23 பேர் யார்?... வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்...!