ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தை, பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் என அரசியல் கட்சியினர் மிக தீவிரமாக களமாடி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம், நடிகர் தளபதி விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரமாகக் களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மக்கள் தொடர்பு, பிரச்சாரம் மற்றும் வாக்காளர்களை அணுகும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தில் மலர்விழி ஜெயபாலா மாவட்ட கழக செயலாளராகப் பொறுப்பு வகித்து, கட்சியின் அடித்தளப் பணிகளைத் தீவிரப்படுத்தி வந்தார்.

அவரது தலைமையில் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள், மக்கள் சந்திப்புகள் மற்றும் கழக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், வாக்கு சேகரிப்பு பணியின்போது சிறுவர்களை ஈடுபடுத்தியதாக ஒரு புகார் எழுந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு, தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் சிறார்களைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு எதிரான சட்ட விதிகளை மீறியதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலை தட்டும் எடப்பாடி..! குழிதோண்டி புதைச்சுட்டாங்க... ஓபிஎஸ் விமர்சனம்..!!
குறிப்பாக, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களின் கீழ் இது பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என சிறுவர்களை கோஷமிட வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கட்சிக்காக வாக்கு சேகரிக்கும் பணியில் சிறுவர்களை ஈடுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...!