கட்சி ஆரம்பித்ததில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் ஒவ்வொரு அசையும், அதன் தலைவர் விஜய்யின் ஒவ்வொரு பேச்சுகளும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன. முதல் மாநாட்டை விக்கிரவண்டியில் வெற்றிகரமாக நடத்திய தமிழக வெற்றிக் கழகம், ரெண்டாவது மாநாட்டை மதுரையில் வைத்திருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், மாநாடு வைக்கப்பட்ட தேதி தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
அதாவது, ஆகஸ்டு மாதம் 25ம் தேதி மதுரையில் மாநாடு நடக்கிறது. அந்தத் தேதியில்தான் நடிகராகி, அரசியலில் புகுந்து சாதித்த கேப்டன் விஜயகாந்த்தின் பிறந்தநாள். சினிமா துறையில் மட்டுமல்லாமல் அரசியல் கட்சித் தலைவர்களும் கூட விஜயகாந்த் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள் என்ற சூழலில், கேப்டன் மீது விஜ்ய்க்கு சிறுவயதில் இருந்தே தனி மரியாதையுண்டு என்பது ஊரறிந்த வரலாறு.
ஏற்கனவே ‘கோட்’ படத்தில் கேப்டன் விஜயகாந்த்திற்கு விஜயகாந்தாவே மாறி மரியாதை செலுத்திய விஜய், தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளில் மதுரையில் மாநாடு நடத்த இருப்பதால் அதன் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. விஜயகாந்த் மீதான மரியாதையில் விஜய் இந்த மாநாட்டை நடத்துவதாக ஒரு தரப்பு கூறுகிறது. மற்றொரு தரப்போ, எம்.ஜி.ஆர் காலம் தொட்டு மதுரை எப்போதும் அரசியலில் ராசியான மண். அதனால்தான் மதுரையில் 2வது மாநாட்டை விஜய் நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக மதுரை மாநாடு! எத்தனை ஏற்பாடுகள் செய்கிறீர்கள்? காவல்துறை அடுக்கடுக்கான கேள்வி!

இதுபுறமிருக்க, விஜய்க்கு ஜோசியத்தில் சிறிது நம்பிக்கை இருப்பதாகவும், அதன் அடிப்படையில் ஆகஸ்டு 25ம் தேதியை தேர்ந்தெடுப்பதாகவும் ஒரு செவி வழிச்செய்தி உலவுகிறது. ஆனால், இந்தத் தேதியில் ஏன் மாநாட்டை நடத்துகிறோம் என்பது குறித்து தவெக தரப்பிலோ, விஜய்யோ எங்கும் வாய் திறக்காமல் சஸ்பண்ஸ்லயே வைத்துள்ளனர். மாநாடு தேதி குறித்து நாம் பேசி வரும் இந்தச் சூழலில், மாநாட்டுக்கான கெடுபிடிகளை மதுரை மாவட்ட காவல்துறை விதித்துள்ளது. விக்கிரவண்டி மாநாட்டில் ஏற்பட்ட சில சிக்கல்கள் மதுரை மாநாட்டில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தவெக தலைமை வேறு ஒரு பக்கம் அறிவுறுத்தியிருப்பதால் மாநாட்டை ஒழுங்காக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தச் சிக்கலில் இருந்து ஓய்ந்து, மாநாட்டுக்கு முழுமையான அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தவெகவினர் மும்முரமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்போ பொதுவா இருக்க கேள்விகள் என்னன்னா ? விஜயகாந்த் பிறந்த நாளுக்காகத்தான் விஜய் இந்த தேதிய தேர்வு செஞ்சாரா......? அப்படினா தேமுதிகவோட தவெக கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கா.... இல்லனா தவெகவோட தேமுதிக கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கா...? விஜயகாந்த் மாதிரி தானும் அரசியல் வாழ்க்கைல ஜெயிக்கணும்னு விஜய் இந்த தேதிய முடிவு செஞ்சாரா ? இப்படி பல கேள்விகளுக்கான பதில்லாம்...மாநாட்டுல தவெக தலைவர் விஜய் பேச்சுல தெரிஞ்சிரும்னு ‘சஸ்பென்ஸ்’ வெக்குறாங்க தவெகவினர்….
இதையும் படிங்க: தன்னை கேலி செய்யும் தவெக.. கண்டுக்காத விஜய்.. கமிஷனர் ஆபிஸ் படியேறிய வைஷ்ணவி..!!