திமுகவின் 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்காக ஒரு முக்கியமான வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், கோயில்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் பாரம்பரிய மின்சார நுகர்வு முறையை மாற்றி, திறமையான மின்சார பயன்பாட்டை உகந்ததாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
இது, மறைமுகமாக சூரிய ஒளி மின் உற்பத்தி கருவிகள் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதை குறிப்பதாக புரிந்துகொள்ளப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக இப்போது புதிய தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. மக்களிடமிருந்து பரிந்துரைகளை சேகரிக்க ஏஐ உதவியுடன் கூடிய போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான வாக்குறுதிகள் இம்முறை மேலும் விரிவாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த வாக்குறுதி, தமிழ்நாட்டின் எரிசக்தி தேவையை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை நோக்கி திருப்புவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. இந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் கோயில்களில் சூரிய மின் உற்பத்தி கருவிகள் பொருத்தப்படும் என்ற வாக்குறுதி என்னவானது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்..!! தவெகவில் ஐக்கியமான முன்னாள் ஐ.ஜி..!! யார் இந்த சந்திரன்..??
சூரிய சக்தியை ஊக்குவித்தால், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் ஊழல் தடைபடும் என்பதாலா என்று சாடியது. உங்கள் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக மக்கள் திட்டத்தை முடக்கி வைத்துள்ளீர்களா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வாக்குவது எண் 225 என்று குறிப்பிட்டு இந்த கேள்வியை தமிழக வெற்றி கழகம் எழுப்பி உள்ளது..
இதையும் படிங்க: தவாக டூ தவெக..!! விஜய்யுடன் கைகோர்க்கும் ஜெகதீச பாண்டியன்..?? அரசியலில் புதிய ட்விஸ்ட்..!!