தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் புனித ஜார்ஜ் கோட்டையில் எழுதப்பட உள்ளது. முதலமைச்சராக பதவியேற்ற நடிகர் விஜய் இன்று முதல் முறையாக தமிழக சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். 59 ஆண்டுகால திராவிட கட்சிகளின் அரசியல் வரலாற்றில் திமுக, அதிமுக இரண்டையும் ஒரே வரிசையில் அமர வைத்துள்ளார் தவெக தலைவர் விஜய். நேற்று சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில், இன்று விஜய்க்கான சோதனை ஆரம்பமாகவுள்ளது. இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை எட்ட முடியாததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடியது. அந்த ஆதரவின் அடிப்படையில்தான் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
108 இடங்களை மட்டுமே வைத்துள்ள தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் 120 என்ற பலத்தோடு இருந்தாலும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிகாரப்பூர்வமாக தனது ஆட்சியை உறுதிப்படுத்த முடியும். அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல்கள் மற்றும் திமுகவின் அதிரடி வியூகங்களுக்கு மத்தியில் தனது கூட்டணி கட்சிகளை ஒருங்கணைத்து இந்த தேர்வில் விஜய் எப்படி தேர போகிறார் என்பதை அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வெறும் ஐந்து நாட்களுக்கு முன்பு வரை நேரித்த அரசியல் இழுபறிகள் நள்ளிரவு பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆளுநரின் நிபந்தனைகள் என அனைத்தையும் தாண்டி இப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள விஜய்க்கு நிர்வாக ரீதியாகும் அரசியல் ரீதியாகவும் இது ஒரு மிகப்பெரிய சவாலாகும்.
இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!
நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?
இன்றைய சட்டசபை கூட்டம் காலை தொடங்கியவுடன் முதலில் சபாநாயகர் தேர்வு நடைபெறும். அதன் பின்னர் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிவார். அதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும். குரல் வாக்கெடுப்பா அல்லது உறுப்பினர்களை தனித்தனியாக எண்ணும் முறையா என்பது சபாநாயகர் முடிவைப் பொறுத்தது. அதிமுகவில் சி.வி.சண்முகம் அணி தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளதால் விஜயின் பலம் இன்னம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கு ஜாக்பாட்..! அரசு கொறடாவாக நியமனம்..! முக்கிய அறிவிப்பு..!!