பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் விஜய் போட்டோ இல்லாத இடத்தில் ஸ்டாலின், எடப்பாடி, விநாயகர், போட்டோ இருக்கக் கூடாது தவெக நிர்வாகி குடிபோதையில்அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக கட்சியினர் 108 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளனர். பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இன்னும் பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடதுசாரி கட்சியினிடம் தவெகவினர் ஆதரவு கேட்டு வரும் நிலையில்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை சேர்ந்த தவெக நிர்வாகி நவீன் குமார் என்பவர் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் குடிபோதையில் உள்ளே நுழைந்து விஜய் போட்டோ இல்லாத அலுவலகத்தில் ஸ்டாலின், எடப்பாடி, மற்றும் விநாயகர் போட்டோ இருக்கக் கூடாது.
இதையும் படிங்க: விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!
இதை அகற்றிவிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டோ மாட்ட வேண்டும் இல்லை என்றால் அலுவலகத்தில் முன்பு தீக்குளிப்பேன் என்று குடிபோதையில் அலுவலகத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு ரகலையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா?