மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் நகை திருட்டு புகார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில், திருபுவனம் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பல்வேறு நிபந்தனைகளோடு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி கேட்டபோது வேறு தேதியிலும் அல்லது வேறு இடத்திலோ மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வடக்கு தொடரட்டும் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள நீதிபதி மறுத்து விட்டார். இந்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. போராட்டம் நடக்கும் இடத்திற்கு காலை முதலே ஏராளமான தொண்டர்கள் வரத் தொடங்கினர். சாரி வேண்டாம் மீதி வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகள் ஏந்தியவாறு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தினர் செயல்பாடுகளை திமுகவினர் தடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கூட காவல்துறை தரப்பிலும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெறும் போராட்டத்தின் பங்கேற்பதற்காக வரும் தொண்டர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக வெற்றி கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மிகவும் வன்மையாக கண்டித்து உள்ளது.
இது ஆளும் கட்சியா அல்லது அராஜக கட்சியா என கேள்வி எழுப்பி உள்ளது. போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் தோழர்களை தன் கீழ் உள்ள காவல்துறையை வைத்து இந்த திறனற்ற திமுக அரசு தடுத்து நிறுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளது. சீப்பை ஒழித்து வைத்தால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று இந்த சர்வாதிகார அரசு நினைப்பதாக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: SORRY வேண்டாம் நீதி வேண்டும்!! விஜய் தலைமையில் போராட்டம்.. குவியும் தொண்டர்கள்..!
இதையும் படிங்க: லாக் அப் மரணங்கள் ... உறவுகளை பறிக்கொடுத்தவர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்