ஜனவரி ஆறாம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் தொடங்கியது. நான்கு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் மீண்டும் சட்டப்பேரவை கூடியது. கடந்த கூட்டத்தின் போது 2025-26 ஆம் ஆண்டுக்கான பொதுபட்ச தாக்கல் ஆனது. அதன் மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆறு மாத காலத்தில் சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில் நான்காம் நாள் அமர்வு இன்று நடைபெறுகிறது.

இன்றைய அமர்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பவானி தொகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், பவானி தொகுதி பிரச்சனையை பேச அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார் என்று கூறிவிட்டார். இதனால் அடுத்த கேள்விக்கு சபாநாயகர் சென்றார்.
இதையும் படிங்க: பிக்பாஸ்... உடனே நிறுத்துங்க... கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கிய வேல்முருகன்...!
அமைச்சர் துரைமுருகனின் பதிலால் திருப்தி அடையாத வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சட்டமன்றத்தில் தன் கேள்விக்கு பதில் அளிக்காத துரைமுருகனை எதிர்த்து வாக்குவாதம் செய்தார். சபாநாயகர் அப்பாவுவின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த தொடர்ந்து வேல்முருகன் வாக்குவாதம் செய்து இருந்தார்.
இதையும் படிங்க: ஆம்னி பஸ்களில் பகல் கொள்ளை... அரசு கண்டுக்காதா? வேல்முருகன் கொந்தளிப்பு...!