தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் உற்சாகமாக நடத்தி வந்தார். அவரைக் காண அலைக்கடலென மக்கள் குவிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தது. கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வந்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக கரூரில் நடந்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டு நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் அருள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேலுச்சாமிபுரம் தனியார் மருத்துவமனை அருகே 10க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸை சுற்றி வளைத்து தாக்கி மிரட்டினர். ஆம்புலன்ஸை எடுக்கவிடாமல், கல்லால் கண்ணாடி, லைட்டுகளை உடைத்தும் சேதப்படுத்தியதாக எஃப்.ஐ.ஆரில் தகவல் வெளியானது. உயிரைக் காப்பாற்ற வந்ததாக தெரிவித்தும் 10க்கும் மேற்பட்டோர் தன்னை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. கரூரில் ஆம்புலன்ஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்கப்பட்டது.

என்ன நடந்தது என்பது குறித்து கரூர் நகர 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவர் ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வெங்கடேசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: உலகப்போர் அத்துமீறல்களுக்காக மன்னிப்பு..!! முன்னாள் ஜப்பான் பிரதமர் காலமானார்..!!
இந்த நிலையில், கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல... அதை செய்ய முடியாது... உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு...!