நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் களத்தில் இறங்கியதில் இருந்து அவரது பொதுக்கூட்டங்களும் மாநாடுகளும் பெரும் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன. விக்கிரவாண்டி முதல் மாநாடு, மதுரை இரண்டாவது மாநாடு, ஈரோடு, திருச்சி, புதுச்சேரி போன்ற இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்கள் என அனைத்திலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்தக் கூட்டங்கள் அனைத்தும் வெறும் ரசிகர்கள் மட்டுமே என்றும், இது ஓட்டாக மாறாது என்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. விஜயின் அரசியல் பிரவேசம் தொடங்கிய காலத்திலிருந்தே அவரது ரசிகர் பட்டாளமே அவரது மிகப்பெரிய பலமாகக் கருதப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னோட்டமாகக் கொண்டு விஜய் களமாடி வருகிறார். கட்சியை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தேர்தல் நெருங்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அறிக்கை குழுவை அறிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை குழுவை விஜய் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார்.
இதையும் படிங்க: வேலுச்சாமிபுரத்தில் முகாமிட்ட அதிகாரிகள் குழு... விஜய் ஆஜராகும் நிலையில் முக்கிய ஆய்வு...!
12 பேர் அடங்கிய குழுவில் தேன்மொழி பிரசன்னா, சத்திய குமார், கிறிஸ்டி பிரத்வி, அருள் பிரகாசம், பரணி பாலாஜி, முகமது பர்வேஸ், பிரபு, பிரபாகர், ராஜ்மோகன், மயூரி, சம்பத்குமார் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பொங்க மாட்டார் விஜய்!! இருக்கு ஆனா இல்லை ரேஞ்சுக்கு விஜயை கலாய்த்த ஆளூர் ஷாநவாஸ்!