கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக கூட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பணம்.? வளர்ச்சியை பார்த்து திமுக பயப்படுதா... TVK பதிலடி..!
சமீபத்தில் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இரண்டாவது முறையாக விசாரணைக்காக விஜய் ஆஜரானார். வாகனத்தில் நின்று கொண்டிருக்கும் போது கீழே நடப்பது தெரியவில்லையா என்றும் கூட்ட நெரிசலுக்கு யார் காரணம் என்பது தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் விஜயிடம் கேட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சுமார் 5 மணி நேரமாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் குற்றப்பத்திரிகையில் விஜயின் பெயரை சேர்க்க சிபிஐ திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்..! 2வது நாளாக துருவித் துருவி விசாரணை..!