கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். கரூர் சம்பவம் எதேர்ச்சையாக நடைபெறவில்லை என்றும் அரசியல் கட்சியினரின் தலையிட இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கரூர் சம்பவத்தை தமிழக அரசு விசாரிக்கக் கூடாது என்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. SIT அமைத்த உத்தரவை எதிர்த்த வழக்கு உட்பட 4 வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி, SIT விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கையை நீதிபதி தலைமையிலான குழுவிடம் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஸ்தோகி, மற்றும் காவல்துறையில் ஐ.ஜி. பதவிக்குக் குறையாத, தமிழகப் பிரிவைச் சேர்ந்த, ஆனால் தமிழ்நாட்டைச் பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும். சிபிஐக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவும், சிபிஐ சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்யவும் அதற்கு சுதந்திரம் உள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கைகளை இந்த மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பார்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிபிஐ அதிகாரிகளுக்கு என்ன ரெண்டு மூளையா? சீமான் அடுக்கடுக்கான கேள்வி...!
இந்த தீர்ப்பு வந்தது 6 மணி நேரத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் நீதி வெல்லும் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சிறிது நேரத்திலேயே வைரலாகி வருகி
இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? அண்ணாமலை சரமாரி கேள்வி…!