தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது, தேர்தலில் கட்சிக்காக எல்லோரும் உண்மையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார். யாருக்காகவும் எதற்காகவும் நாம் அரசியலில் காம்பரமைஸ் செய்து கொள்ள கூடாது என்று தெரிவித்தார். அனைவரும் ஒற்றுமையாக இருந்து சேர்ந்து உழைத்து வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.
மக்கள் நமக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பார்கள் என்றும் அது எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். அரசியலில் இருப்பவர்கள் அண்ணாவை மறந்து விட்டார்கள் என்றும் அண்ணா பெயரை வைத்துள்ள கட்சியும் அண்ணாவை மறந்து விட்டது என்றும் தெரிவித்தார். மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதற்காக தான் இந்த கூட்டம் என்று தெரிவித்தார். ஆண்ட கட்சியாக இருக்கட்டும் ஆளும் கட்சியாக இருக்கட்டும் அவர்களைப் பொறுத்த வரைக்கும் பூத் என்றால் கள்ள ஓட்டு போடும் இடம் என்று தெரிவித்தார். ஆனால் நமக்கு அது ஜனநாயகக் கூடம் என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு ஓட்டையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கட்சி வேறுபாடுகளை தாண்டி இந்த விஜய், மக்கள் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அனைவரையும் பாதுகாப்பாக பூத்களுக்கு அழைத்து வந்து ஓட்டு போட வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அனைவரும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்றும் தெரிவித்தார். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு முக்கியம் என்றும் பேசினார். இது சாதாரண தேர்தல் அல்ல., ஜனநாயகப் போர் எனவும் தெரிவித்தார். இந்த தீய சக்தி தில்லு முல்லை எல்லாம் உங்களுக்கே தெரியும் என்றும் முழித்துக் கொண்டிருக்கும் போதே முழியை தோண்டி எடுத்துக் கொண்டு செல்லும் கூட்டம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அழுத்தத்திற்கு அடங்குற ஆளா நான்? எனக்கு ஒரு பைசா வேணாம்… விஜய் திட்டவட்டம்..!
இந்த மூன்று மாதங்களில் நீங்கள் செய்யும் களப்பணியில் தான் வெற்றியே இருக்கிறது என்றும் உங்களுக்கு விஜய் பிடிக்கும் என்பது உண்மை என்றால் அது உங்கள் உழைப்பில் காட்டுங்கள் என தெரிவித்தார். மேலும் வேட்பாளர்களுக்கு உங்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நாட்டை மீட்டெடுத்த வேலு நாச்சியாரை குறிப்பிட்டு பேசிய விஜய், தவெக படை இருக்கும்போது என்ன பயம் என்றும் தனியாக கெத்தாக நின்று ஜெயிக்கும் என்றும் தெரிவித்தார். பெண்கள் படையை பார்த்து தான் அரசியல் அரங்கமே அதிர்ந்து போய் இருக்கிறது என்று கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் எல்லோரும் உண்மையாக உழைப்போம்., சத்தியமாக உழைப்போம்., உறுதியாக உழைப்போம்., ஒற்றுமையாக உழைப்போம் என அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொள்ள வைத்தார். நாம் POWER PACK FORCE என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இதுவா டா தமிழ்நாடு... திருமாவை அடியாளாக பயன்படுத்தும் திமுக..! விளாசிய ஆதவ் அர்ஜுனா..!