தஞ்சாவூரில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் கட்டிடம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது, தனிப்பட்ட வாழ்க்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என அவரது பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்காக போலீசார் சென்றுள்ளனர். இதனால் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலினை கைது செய்யச் சென்ற போலீசார் உடன் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்குவாதம் செய்து உள்ளார். மேலும் உதயநிதியின் வீட்டிற்கு ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் வருகை தந்துள்ளார்.

உதயநிதியை கைது செய்ய சென்றபோது போலீசார் அவரது மனைவி கிருத்திகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் அறிந்ததும் உதயநிதி ஸ்டாலினின் வீட்டை நோக்கி திமுகவினரும் படையெடுத்து வருகின்றனர். என்ன வழக்கு என்றும் யார் புகார் கொடுத்தது என்றும் சரமாரி கேள்விகளை போலீசாரிடம் எழுப்பினர். திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உதயநிதி என் வீட்டிற்கு வருகை தந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஆபாசமாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர்ந்து தஞ்சை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "அந்த நடிகை"..!! கலைஞரின் பேரன்-னு சொல்லி இப்படி ஒரு பேச்சா.? உதயநிதிக்கு வினோஜ் பி. செல்வம் கண்டனம்..!!
உதயநிதி ஸ்டாலின் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து தஞ்சாவூர் அழைத்து செல்கிறோம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கைதாகுவதற்கு உதயநிதி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. டிஎஸ்பி அழகேசன் தலைமையில் உதயநிதியை கைது செய்ய போலீசார் பேசி வரும் நிலையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!