கரூரில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்கள் வசித்து வரும் பகுதியில் எழுப்பி உள்ள தீண்டாமை சுவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பட்டியலின சமுதாயத்தினரும், இது தீண்டாமை சுவர் அல்ல, கோவில் சுற்றுச் சுவர் என பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும் கூறி வருகின்றனர்.
இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக இரு சமுதாயத்தினரிடையே பிரச்சனை உருவாகி உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தலாடம்பட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, பட்டியலின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள என இரு பிரிவை சேர்ந்த சமூகத்தினர் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சொந்த நாட்டிலேயே சதி... பிரதமர் பதவியில் இருந்து நெதன்யாகுவை ஓட, ஓட விரட்ட மாஸ்டர் பிளான்...!
இப் பகுதியில், ஸ்ரீ பகவதியம்மன் கோவில் மற்றும் நாடக மேடை ஆகியவை அமைத்து பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் பட்டியலின பிரிவை சேர்ந்த சமூகத்தினர் அப்பகுதியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இரு பிரிவிற்கும் பொதுவாக அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட பொது கழிப்பிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீதிலமடைந்ததாக கூறி இடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொது கழிப்பிடம் இருந்த அந்த இடத்தில் தங்களுக்கு நாடக மேடையும், அங்கன்வாடியும் அமைத்து தர வேண்டும் என பட்டியலின சமுதாயத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இதை விரும்பாத பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அந்த இடத்தில் பகவதி அம்மன் கோவில் பாதுகாப்பிற்க்காக சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். இதனால், பட்டியலின மக்கள் கோரிக்கையை ஏற்காமல் கோவில் பெயரை கூறி அந்த இடத்தில் சுற்று சுவர் கட்டப்பதை தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளனர் என பட்டியலின சமுதாயத்தின் ஒரு பிரிவினர் மட்டும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.
கடந்த மாதம் 7ம் தேதி இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காததால், இன்று இரு சமுதாயத்தினர் இடையே பிரச்சனை எழுந்து உள்ளது என மாவட்ட நிர்வாகத்தை குற்றம் சாட்டி உள்ளனர்.
இவ்வளவு நாள் அமைதியாக இரு சமுதாயத்தினரும் இருந்தது வருகிறோம். கோவில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டதை பட்டியலின மக்கள் பலர் ஏற்றுக் கொண்ட நிலையில், வெளியில் இருந்து வந்த சில அமைப்புகள் இதை தீண்டாமை சுவர் என சித்தரித்து
அமைதியாக இருக்கும் இரு சமுகத்தினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர் என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: எஸ்.எஸ்.ஐ. இதயம் துடிதுடித்த இடத்தில் திடீரென குவிந்த போலீஸ் உயர் அதிகாரிகள்.. என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் ஆய்வு...!