காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில் மீண்டும் வடகலை- தென்கலை பிரச்சனை எழுந்துள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் நேற்று முதல் கொடியேற்றுத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று காலையில் வரதராஜ பெருமாள் அம்ச வாகனத்தில் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தார்.

கங்கை கொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளிய போது பெருமாளின் முன்பு பூஜையின் போது கலகலப் பிரிவினரான தாத்தாச்சாரியார்கள் மந்திர புஷ்பம் பாடுவது வழக்கம். இந்நிலையில் தென்கலை பிரிவு பிரபந்தம் பாடுவதில் உள்ள உரிமை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தென் கலை பிரிவினர் பெருமாள் முன்பு ததாச்சாரியார்கள் மந்திர புஷ்பம் பாடுவதில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தென்கலை பிரிவினர் பாட்டு பாடி இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க: இனி கொடூர வேட்டைதான்... 2026-க்குள் பயங்கரவாதிகளை மொத்தமா அழிச்சிடணும்.. இந்தியா சூப்பர் ப்ளான்..!
இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெருமாளின் முன்பு இரு பிரிவினரும் வாக்குவாதத்தில் நாள்தோறும் ஈடுபடும் சம்பவம் பக்தர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற வடகலை மற்றும் தென்கலை இரு பிரிவினருக்கு இடையே பலதரப்பு பிரச்சனைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் நிம்மதியாக சாமியை தரிசிக்க வரும் பக்தர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். சில சமயங்களில் எல்லை மீறி தகாத வார்த்தைகளில் பேசி கொள்வதும், அவ்வப்பொழுது அரங்கேறுவதால் பொதுமக்களும் பக்தர்களும் அவதி அடைகின்றனர்.

பல ஆண்டுகளாக கோயில் வளாகத்துக்குள்ளையே நடந்த இந்த வாக்குவாதம் தற்போது வீதிக்கு வந்துவிட்டது என பொதுமக்கள் புலம்புகின்றனர். நீதிமன்ற வழிகாட்டல்கள் இருந்தும் இந்த பிரச்சனைக்கு இந்து சமய அறநிலையத்துறை செயலாளரோ அல்லது அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களோ தீர்வு காண ஏன் முற்படவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். வடக்கலை தென்கலை பிரச்சினையால் நாங்கள் முழு மனதுடன் பெருமாளை தசிக்க முடியவில்லை என பக்தர்கள் புலம்புகிறார்கள். இந்த மோசமான சம்பவங்கள் அனைத்தும் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: நீடூழி வாழுங்கள் அண்ணா! எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முக்கிய புள்ளி...