தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை சுட்டிக்காட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திமுக பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என நினைக்கிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் எந்தெந்த கட்சிகள் வெற்றி பெறும் என்று கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்த அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்முறையாக இந்த தேர்தலை சந்திக்கிறார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

விஜய் மாற்றத்திற்கான முகமாக இருப்பார் என்று பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் சொல்லி வருகின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் திமுக பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்று நினைக்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருப்பதாகவும் அதிகளவில் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறி இருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு கருத்துக்கணிப்பில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் மற்றொரு கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என்று கூறி இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார். இருந்தாலும் தமிழகத்தில் திமுக பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்று தான் நினைப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ”அமித் ஷாவுக்கு என்ன நெஞ்சழுத்தம், மண்டை செருக்கு”... வார்த்தையை விட்ட உள்துறை அமைச்சருக்கு வைகோ பதிலடி...!