தஞ்சாவூரில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் கட்டிடம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, தனிப்பட்ட வாழ்க்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என அவரது பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை பாஜக முன்னாள் MLA வானதி சீனிவாசன் கண்டித்துள்ளார். மேகதாது - காவிரி பிரச்சினைக்காக தஞ்சையில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இரட்டை அர்த்தப்படும்படியான தரங்கெட்ட வார்த்தைகளை பேசியதை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

இது போன்று பேசும் திமுகவினரின் நாகரீகமற்ற, பொறுப்பற்ற அரசியலுக்குத்தான் மக்கள் ஆட்சியிலிருந்து அகற்றினார்கள். அப்படியும் திமுக திருந்தவில்லை என்றார். 75 ஆண்டுகால அரசியல் இயக்கம் இப்படித்தான் தனது கட்சி மேடைப் பேச்சாளர்களை உருவாக்கி வருகிறதா? என்றும் கேட்டார்.
இதையும் படிங்க: "வறண்டு கிடக்குது காவிரி... ஜோக்கர் கூட்டமான அமைச்சரவை"..! உதயநிதி கடும் குற்றச்சாட்டு..!!
எதிர்க்கட்சி என்பது தமிழக நலனுக்காகவும், ஆட்சிக்கான நல்ல ஆலோசனைகளையும் வழங்கி ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டுமே தவிர அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி அரசியல் செய்யும் இவர்கள் என்று திருந்தப் போகிறார்களோ? எனவும் கேட்டுள்ளார். திமுகவினரின் இந்த அநாகரிகப் போக்கை ஒட்டுமொத்த தமிழகமும், குறிப்பாக பெண்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் இந்த கேவலமான பேச்சைத் திரும்பப் பெற்று, உடனடியாக உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "தாரைவார்க்கப்படும் காவிரி உரிமை"..! அனைத்துக் கட்சிக் கூட்டம் எப்போது.? உதயநிதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!