இந்தியாவின் ஒற்றுமை, கலாச்சார பெருமை மற்றும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த தியாக உணர்வின் சக்திவாய்ந்த அடையாளமாக வந்தே மாதரம் திகழ்வது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் கூட்டு ஆற்றலின் சக்திவாய்ந்த ஆதாரமாகத் தொடர்கிறது. பங்கிம் சந்திர சட்டோபாத்யாய இயற்றிய வரலாற்று சிறப்புமிக்க தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு மக்கள் மாளிகை, சார்பாக மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகளை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கௌரவிக்கும் விதமாகவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அதன் ஆற்றலைப் பயன்படுத்தவும், இளைய தலைமுறையினரிடையே சிந்தனைமிக்க ஈடுபாட்டை ஊக்குவிக்கவும், இந்தப் பாடல், பாடலின் உணர்ச்சி, வரலாற்று மற்றும் சமகால பொருத்தத்தைப் பற்றிய அவர்களின் புரிதலை மேலும் ஆழப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படும் என்றும், மாணவர்கள் தங்கள் படைப்புகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனுப்பலாம் எனவும், இரண்டு படைப்புகளுக்கும் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் முட்டைகளின் மாதிரிகள் ஆய்வு..!! FSSAI அதிரடி உத்தரவு..!!
* 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு:
Role of Vande Mataram in India's Freedom Struggle.
தமிழ் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வந்தே மாதரம் பாடலின் பங்களிப்பு.
* 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு:
Vande Mataram: The Song that Awakened Bharat.
தமிழ் வந்தே மாதரம் பாடலால் விழித்தெழுந்த பாரதம்.
* பல்கலைக்கழகம் /கல்லூரி மாணவர்களுக்கான போட்டி தலைப்பு:
Relevance of Vande Mataram in Building Viksit Bharat @2047
2047இல் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் வந்தே மாதரம் பாடலின் பொருத்தப்பாடு
*போட்டி வரைமுறைகள்:
1) கட்டுரைகள் A4 வெள்ளைத் தாள்களில் கையால் அளவு எழுதப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் (தட்டச்சு செய்யக்கூடாது).
2) மேலும் கட்டுரைகளின் நீளம்; பள்ளி மாணவர்களுக்கு அதிகபட்சம் 10 (பத்து) பக்கங்கள் (ஒரு பக்கத்திற்கு தோராயமாக 20 வரிகள் மற்றும் மொத்தம் 1500 வார்த்தைகள் முதல் 2000 வார்த்தைகள் வரை).
3) கல்லூரி மாணவர்களுக்கு அதிகபட்சம் 15 (பதினைந்து) பக்கங்கள் (ஒரு பக்கத்திற்கு தோராயமாக 20 வரிகள் மற்றும் மொத்தம் 2500 வார்த்தைகள் முதல் 3000 வார்த்தைகள் வரை).
4) பங்கேற்பாளர்கள் கையால் எழுதப்பட்ட கட்டுரைகளின் அசல் பிரதியை மட்டும் 2026 ஜனவரி 31, மாலை 05.00 மணிக்குள் அல்லது அதற்கு முன் ஆளுநரின் துணைச் செயலாளர் (பல்கலைக்கழகங்கள்), ஆளுநர் செயலகம், மக்கள் மாளிகை, சென்னை-600 022 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5) மாணவர்கள் தங்கள் பெயர், வீட்டு முகவரி, தாங்கள் படிக்கும் வகுப்பு / துறை, கல்வி நிறுவனத்தின் முகவரி மற்றும் தொடர்பு செல்லிட பேசி எண்ணை ஒரு தனித் தாளில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும், இது கட்டுரையின் முதல் பக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் சுய அறிவிப்பு சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்திற்கு சமஸ்கிருத பெயர்.. மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு!